Published : 11,Jul 2019 03:30 AM
’பெண்ணிடம் தவறாக நடந்தார்’: ஆப்கான் கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட்!

ஓட்டலில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அப்தாப் ஆலம் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அப்தாப் ஆலம். இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணிக்காக விளையாடினார். அணி வீரர்கள் தங்கியிருந்த சவுத்தாம்டனில் உள்ள ஓட்டலில், பெண் ஒருவரிடம் தவறாக நடக் க முயன்றதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆப்கான் அணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில் ஆப்கான் கிரிக்கெட் அணியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, ஆலம் மீதான புகார் குறித்து விசாரித்தது. வீரர்களி ன் நடத்தை விதிகளை மீறி அவர் செயல்பட்டது உறுதியானதால், அவர் ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.