Published : 03,Jul 2019 01:20 PM

தமிழக அரசின் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டம் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி 

high-court-ban-for-tamilnadu-government-law

நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நிலம் கையகப்படுத்தும் மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்க கடந்த 2015 ஆம் ஆண்டு புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டத்தை எதிர்த்து ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உட்பட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதுகுறித்த விசாரணையில் இந்த புதிய சட்டத்தால் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வருவதாக மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளின் வாதங்களை ஏற்று தமிழக அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்களை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்