Published : 27,Jun 2019 04:35 PM

சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

Chennai--Salem-and-some-Collectors-was-Changed

சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆசியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தமிழ்நாடு இசைக்கல்லூரி பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். இசைப் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சீதாலட்சுமி சென்னை ஆட்சியராக நியமனமாகியுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மாநில தேர்தல் ஆணையச் செயலாளராக இருந்த டி.எஸ்.ராஜசேகர், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஏ.ராமன், சேலம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்த இந்த உத்தரவை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்