சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் சூழலில், ஒரே நாளில் 8 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டை சீதாம்பாள் காலனியில் உள்ள சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். வழிப்பறிப்பின்போது கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய சாந்தா, சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்படாத நிலையில், குற்றவாளிகளின் அடையாளம் மற்றும் வாகன பதிவெண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஐஸ் ஹவுஸ், கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் சுமார் 29 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ராயப்பேட்டையில் வழிப்பறி முயற்சி நடந்துள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும், காவல்துறையிடம் சிக்குவோம் எனத் தெரிந்தும் இதுபோன்ற தொடர் வழிப்பறி சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்