ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது இடைக்கால சபாநாயகராக மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி வீரேந்திரகுமார் பதவியேற்றார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உள்ளிட்டோர் என மொத்தம் 313 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவது எந்த சிக்கலும் இருக்காது என பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். இன்று மக்களவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் முடிந்த பிறகு, ஓம் பிர்லா மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Loading More post
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்