[X] Close

அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு

case-on-kamaraj

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மோசடி புகாரின் பேரில் மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

எஸ்.வி.எஸ் குமார் என்பவர் தாக்கல் செய்த 30 லட்ச ரூபாய் மோசடி புகார் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இருதினங்களுக்கு முன் விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் சின்ஹா ஆஜராகி, “அமைச்சர் காமராஜ் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் தேவை” என்ற வாதத்தை முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ’அமைச்சர் காமராஜ் மீதான புகார் தொடர்பாக ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் இது தொடர்பாக மன்னார்குடி காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.


Advertisement

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags : minister kamaraj

Advertisement

Advertisement
[X] Close