[X] Close

“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்

PM-Modi-about-election-campaign

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை ‌பயணம், புனித யாத்திரை போன்று இருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement

தேசிய ஜனநாயக் கூட்டணி கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு, பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளித்தார். இதில்‌ அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, ஜே.பி.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ராம் விலாஸ் பாஸ்வான், நரேந்திர சிங் தோமர், ஹர்சிம்ரத் கவுர், அனுப்பிரியா படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Advertisement

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்த தேர்தல், அரசியலைத் தாண்டி நிறைய விஷயங்கள் இருந்ததாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சியினருக்கு எதிராக பொதுமக்களே போராடியதாகவும், தேர்தல் பயணம், புனித யாத்திரை போன்று இருந்ததாகவும் பிரதமர் கூறினார். இந்தத் தகவலை ‌அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக முக்கிய துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக தெரிகிறது. இதனிடையே, அனைத்து ‌‌அமைச்சகங்களும் புதிய அரசுக்கான 100 நாள் திட்டத்தை தயாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவ‌ல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close