Published : 20,May 2019 03:13 PM

இலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா? - தமிழக அரசு

tamilnadu-government-ask-Are-Free-Laptops-Really-Used

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தின்கீழ் மடிக்கணினி பெற்ற மாணவ, மாணவிகளிடம் அதன் பயன்பாடு குறித்து தமிழக அரசு கருத்து கேட்டுள்ளது. 

அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் மடிக்கணினிகள் உண்மையில் மாணவ, மாணவிகளுக்கு பயன்படுகிறதா அல்லது விற்கப்பட்டு விடுகிறதா என்பன போன்ற தகவல்களை அறிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

இவற்றின் பயன்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் கருத்துக்கேட்பு நடத்தும் தமிழக அரசு, இலவச மடிக்கணினி வினியோகித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பாலிடெக்னிகுகளுக்கு படிவங்களை அனுப்பியுள்ளது. அந்தக் கருத்துக்கேட்புப் படிவத்தில், மடிக்கணினியின் பயன்பாடு, தற்போதைய நிலை உள்ளிட்ட மொத்தம் 15 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்