Published : 27,Apr 2017 08:12 AM

தாய், தந்தை இல்லாத வீடு அதிமுக: சொல்கிறார் அமைச்சர்

sellur-raju-speech-about-to-ADMK-current-issue

தாயும், தந்தையும் இல்லாத வீடு போல அதிமுக தற்போது இருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.7ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அனைத்து கூட்டுறவு வங்கிகளும் இணையம் மூலமாக இணைக்கப்படுகின்றன; இதன்மூலம் தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்படும்’ என்றார். அதிமுகதான் அடுத்த 4 ஆண்டுகளும் ஆட்சி செய்யும் என்ற அவர், தாய்-தந்தை இல்லாத வீடு போல அதிமுக இருப்பதாகவும் அதிமுகவின் தொண்டர்கள் மற்‌றும் மக்களின் விருப்பத்திற்கேற்ப இரு அணிகளும் இணையும் என்றும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்