Published : 25,Apr 2017 02:56 AM

போராட்டத்தில் வன்முறை கூடாது: ஸ்டாலின் அட்வைஸ்

stalin-says-no-violence

அமைதி வழியில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய உன்னத கோட்பாடுகளை பின்பற்றி எவ்வித வன்முறைக்கும் இடம் தராமல் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும். யார் தூண்டுதலுக்கும் இடம் அளிக்காமல் முழு அடைப்பு போராட்டத்தை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும். அமைதியான முறையில் போராட்டம் நடத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்க தொண்டர்கள் உதவ வேண்டும்’என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்