மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் புதிய வேட்பாளராக ஸ்ரீதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்காமல் இருந்தன. இதில் காங்கிரஸ் கூட இன்று சிவகங்கை வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஆனால் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம் என்று கூறியிருந்த மக்கள் நீதி மய்யம் இன்னும் அறிவிக்கவில்லை.
வேட்பாளர் தேர்வில் சில ஆலோசனைகளில் அக்கட்சி ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளரை மக்கள் நீதி மய்யம் மாற்றியுள்ளது. இதற்கு முன்னர் சிவக்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீதர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, கோவை சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில், மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கமல் கலந்துக் கொண்டார். இந்த கூட்டம் அனுமதியில்லாமல் நடத்தப்படுவதாக, தேர்தல் பறக்கும் படையினர் ஆட்சேபனை தெரிவித்ததனார். இதனால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்