Published : 14,Mar 2019 02:28 PM

பொள்ளாச்சி வீடியோ விவகாரம் : நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சம்மன்

Pollachi-video-leaked-issue---Summon-issued-to-Nakkeeran-Gopal

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில், நக்கீரன் இணையதளம் வெளியிட்ட வீடியோ தொடர்பாக அதன் ஆசிரியர் கோபாலுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனில், நாளை காலை 11 மணிக்கு அவர் சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, தன்மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்