மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவின் அரசியல் செயல்பாடுகளை மாநில அரசு தடுத்து வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் தேர்தல் ஆணையத்தில் தங்கள் புகாரை சமர்ப்பித்துள்ளனர். அதில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தங்களுக்கு போடும் முட்டுக்கட்டைகளை நீக்கி அங்கு நியாயமான, பாரபட்சமற்ற தேர்தல் நடத்த உதவ வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை கண்டு திரிணாமுல் கட்சி மிரண்டு போயுள்ளதாகவும் இதன் காரணமாகவே அங்கு தங்கள் செயல்பாடுகள் தடுக்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளையும் புகார் மனுவில் பாரதிய ஜனதா பட்டியலிட்டுள்ளது.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில் “ மேற்கு வங்காளத்தில் ஒவ்வொரு பாரதிய ஜனதா தொண்டரும் மிரட்டப்படுகிறார். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தொண்டர்கள் முடக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் மத்திய அரசால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்புகிறார் மம்தா. இது முரணாக இல்லையா. மம்தா ஏற்படுத்திய அச்சுறுத்தும் சூழல் காரணமாகவே நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு வர நேரிட்டது” என தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!