போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்க முடியாது என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, கடந்த 22 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டை யன் இன்று ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘’ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் ஏற்கப்படும்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். திரும்பாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். கல்வி, மக்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கூறியுள்ள அவர், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றும் அதை செயல்படுத்தினால் மக்கள் நலதிட்டங்களுக்கு நிதி இல்லாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை தருவதாகக் கூறினால் பணிக்கு திரும்ப தயார் என்று தெரிவித்துள்ளனர். அந்த அமைப்பின் மாயன் கூறும்போது, ’’பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு அதிக செலவில்லை. நாங்கள் புதிய கோரிக்கை எதையும் வைக்கவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைதான் கேட்கிறோம். அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதை ஏற்க முடியாது’’ என்று தெரிவித் துள்ளார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!