[X] Close

குடிபோதையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்

Son-Killed-Father-during-drunken-time-in-Thiruvarur

திருவாரூரில் தந்தையையே மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகரசன். இவருடைய மகன் ரவிக்குமார். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு பல்வேறு பிரச்னைகளை பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிவிட்ட நிலையில், மகன் தந்தையை பின் மண்டையில் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை அழகரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து வடுவூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்து அழகரசன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ரவிக்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முக்கிய காரணம் குடிப்பழக்கம் தான் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close