[X] Close

சேலத்தில் புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் 

chief-minister-opened-double-dicker-bus-stand-function-in-selam

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

சேலத்தில் ரூ. 198 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். அவருடன் அமைச்சர் வேலுமணியும் மாவட்ட ஆட்சியர் ரோகினியும் நிகழ்சியில் கலந்து கொண்டனர்.


Advertisement

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதன்முறையாக ஈரடுக்கு பேருந்து நிலையம் சேலத்தில் அமைக்கப்படுகிறது. சேலம் பழைய பேருந்து நிலையத்தை புணரமைத்து புதிய ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது. அதில் ரூ. 92 கோடியில் ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல பாதாள சாக்கடை திட்டமும் தனிக்குடிநீர் திட்டமும் முடிவுற்ற பகுதிகளில் சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஈரடுக்கு பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் இந்தக் கட்டுமானப்பணிகள் முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது உள்ள பேருந்து நிலையத்தை தடை செய்துவிட்டு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய ஈரடுக்கு பேருந்து நிலையத்தின் மாதிரி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close