[X] Close

மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை.. காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு..!

BJP-Leading-in-Madhya-Pradesh

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும்போட்டி நிலவுகிறது. இருப்பினும் பாஜகவே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


Advertisement

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. தற்போது முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.


Advertisement

ஆரம்பத்தில் இருந்தே பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஒருகட்டத்தில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாஜக ஆட்சியை இழக்கும் என கருதப்பட்டது.

இந்நிலையில் மறுபடியும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாரதிய ஜனதா 113 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல காங்கிரஸ் கட்சி 107 இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.


Advertisement

கடந்த முறை தேர்தலை விட பாஜக இந்த முறை 52 இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் கட்சி 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆட்சியமைக்க பெரும்பான்மை இரண்டு கட்சிகளுக்கும் தற்போது கிடைக்காத நிலையில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும்போட்டி நிலவுகிறது. எனவே மத்தியப் பிரதேசத்தில் யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே தற்போது அதிகரித்து காணப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close