[X] Close

செவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்.. புகைப்படம் அனுப்பியது..!

NASA-InSight-Lander-Arrives-on-Martian-Surface

நாசாவின் இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


Advertisement

செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய நாசாவால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட். இதனை கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இன்சைட் விண்கலம் தனது பயணத்தை தொடர்ந்தது. 6 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், 26-ஆம் தேதி இன்சைட் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.


Advertisement

அதன்படி, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இன்சைட் விண்கலம் தரை இறங்கியது. விண்கலம் தரை இறங்கியவுடன் தான் எடுத்த புகைப்படத்தை நாசாவிற்கு அனுப்பி உள்ளது. இரண்டு வருட ஆயுட்காலம் கொண்ட இந்த இன்சைட் விண்கல திட்டத்திற்காக 850 மில்லியன் டாலர் தொகையை நாசா செலவு செய்துள்‌ளது.

விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் இறங்கியதை அறிந்த நாசா விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் ஆர்வ மிகுதியால் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close