விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘சீறும் புலி’ என்று தலைப்பிலான இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இதனை இயக்கி வருகிறார்.
1954 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பிறந்த பிரபாகரனின், 64வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘சீறும்புலி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் பிரபாகரனைப் போல் ராணுவ தோற்றத்தில் பாபி சிம்ஹா ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். அவர் அருகில் புலி ஒன்று உள்ளது. புலியின் தலையில் அவர் கையை வைத்துள்ளார்.
‘சீறும் புலி’ என்ற தலைப்பிற்கு மேலே ‘மக்கள் தலைவனின் எழுச்சி’ என்ற வாசகமும், தலைப்பிற்கு கீழே ‘வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு’என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பதும் போஸ்டரில் இடம்பெறவில்லை.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix