[X] Close

யானை பலம் கொண்ட 'கஜா' புயல்.. மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை

Gaja-Cyclone-formed--Chance-for-Heavy-Rain

வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர்சூட்டப்பட்டுள்ள நிலையில் வரும் 15-ஆம் தேதி தமிழகத்தில் மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. நெல்லூர் இருந்து 1,050 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த புயல், வரும் 15-ஆம் தேதி காலை வட தமிழகம்- தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

கஜா புயல் தீவிர புயலாக வாய்ப்பிருப்பதாகவும் அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கக் கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் காரணமாக வரும் 15-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கஜா என்றால் யானை என அர்த்தமாகும். இந்த பெயரை இலங்கை அரசு பரிந்துரைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close