Published : 20,Oct 2018 04:23 AM
“எனது அக்கவுண்ட்டை ஹேக் செஞ்சுட்டாங்க” - த்ரிஷா

தனது ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்துவிட்டதாக நடிகை த்ரிஷா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா கடந்த ஒருமாதமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நாயகி ஆகியுள்ளார். அதற்கு காரணம் ‘96’ திரைப்படம். நீண்ட நாட்களுக்குப் பிறகு த்ரிஷாவிற்கு ஒரு சிறந்த கதாபாத்திரத்தை அந்த படம் பெற்றுத்தந்துள்ளது. அந்த படத்தில் த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடை தற்போது ட்ரெண்டாகியுள்ளது. பலரும் அந்த ஆடையை வாங்கி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Read Also -> ‘சர்கார்’ கதையே வேற.. அரசியல் கதையும் இல்லை. அரசியல்வாதி கதையும் இல்லை
இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “எனது கணக்கை சிலர் ஹேக் செய்துள்ளனர் என நினைக்கிறேன். தயவுசெய்து எனது இன்பாக்ஸில் இருந்து ஏதேனும் மெசெஜ் வந்தால் அதனை பொருட்படுத்திக்கொள்ள வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.