[X] Close

விஐபி-கள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி பாக்கி!

Govt-owes-Air-India-over-Rs-1146-86-crore-for-VVIP-charter-flights

’ஏர் இந்தியா’ விமான நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ. 1,146 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.


Advertisement

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனத்திடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு ஏர் இந்தியா அளித்துள்ள பதிலில் இது தெரிய வந்துள்ளது.

பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக தனி விமானங்களில் பயணம் மேற்கொள் வது வழக்கம். இந்த விமானங்களை அவர்களுக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்புகளுடன் ஏர் இந்தியா வழங்கி வருகிறது. இந்த பயணங்களு க்காக மத்திய அரசு, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 1,146 கோடி ரூபாய் கட்டணப் பாக்கி வைத்துள்ளது.


Advertisement

Read Also -> சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு!

Read Also -> “ஆண் போலீசாருக்கும் உண்டு தாய்மை குணம்”...நெகிழ வைக்கும் சம்பவம் 
 

பாதுகாப்பு அமைச்சகம் 211.17 கோடி ரூபாயும், மத்திய அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவை 543.18 கோடி ரூபாயும், வெளி யுறவுத்துறை அமைச்சகம் 392.33 கோடி ரூபாயும் பாக்கி வைத்துள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தி யாவுக்கு மத்திய அரசே 1,146 கோடி ரூபாயை பாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close