Published : 27,Mar 2017 01:44 AM

கட்டண நிலுவை வைத்தால் தேர்தலில் போட்டியிட தடை?

Election-Commission-said-Bar-parties-not-paying-dues-for-utility-bills

மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைபேசி கட்டணம் பாக்கி வைத்தால் தேர்தலில் போட்டியிட ஏன் தடை விதிக்கக்கூடாது? என்று கேட்டு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தி இருக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், வேட்பாளர்கள் அனைவரும் மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டணங்கள் செலுத்தியதற்கான நிலுவையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைபேசி கட்டணத்தில் பாக்கி வைத்திருக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்