Published : 03,Aug 2018 01:01 PM

மேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை

Anna-University-Corruption---2-Sub-Professor-was-Suspended

மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக மேலும் 2 உதவி ஆசிரியர்களை அண்ணா பல்கலைக்கழகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியிருப்பதால், பேராசிரியர் உமா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக இருந்த விஜயகுமார் நீக்கப்பட்டார். வழக்குப் பதிவு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் விஜயகுமாரும், அதே வளாகத்தின் உதவி பேராசிரியரான சிவக்குமாரும் துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் விஜயகுமார் மற்றும் சிவக்குமார் ஆகியோர் உதவிப்பேராசிரியர்கள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே விஜயகுமாருக்கு பதில், பேராசிரியர் டேனியல் தங்கராஜ் பொறுப்பு முதல்வராக பதவியேற்றுள்ளார். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்