[X] Close

விராட் கோலிக்கு அனுஷ்கா அடித்த ஃப்ளையிங் கிஸ் - வைரல் வீடியோ

Anushka-is-all-kisses-for-Virat-at-India-vs-England-ODI-match--Watch-video

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கேப்டன் விராட் கோலிக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா அன்பு முத்தங்களை பொழிந்துள்ளார். 


Advertisement

4 வருடங்களாக காதலித்து வந்த விராட்-அனுஷ்கா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில்  திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பில் இருந்தே இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு சென்று பார்த்து வருகிறார். அதேபோல், இந்திய அணி வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது அவர் உடனே செல்வார். அப்பொழுதெல்லாம், விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்த செய்திகளும் வலம் வரும். 

அந்த வகையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது அனுஷ்கா சர்மா, கணவர் விராட் கோலிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.


Advertisement

                       

அந்த வீடியோவில் ஷிகர் தவான் மனைவி ஆய்ஷாவும், அனுஷ்காவும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். விராட் கோலி அரைசதம் அடித்ததும், அவரை பார்த்து அனுஷ்கா ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார். 

                    


Advertisement

முன்னதாக, மைதானத்திற்குள் வரும் போது மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவா ஆகியோருடன் அனுஷ்கா ஒரே காரில் வந்தார். அதேகாரில், ஷிகர் தவான் மனைவி ஆய்ஷா, மகள் ஆலியா மற்றும் ரோகித் ஷர்மா மனைவி ரித்திகா ஆகியோரும் வந்தனர்.  

                           

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close