[X] Close

அரசின் கஷ்டங்களை எங்களிடம் சொல்வது நியாயமா?: துரைமுருகன் கேள்வி

Its-rights-to-tell-government-difficulties-with-us---Durai-murugan

நாங்கள் எங்கள் கஷ்டத்தை அரசிடம் சொன்னால், அரசின் கஷ்டங்களை எங்களிடம் சொல்வது நியாயமா என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

கே.வி.குப்பம் பகுதியில் மகளிர் கல்லூரி திறக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார். அப்போது கல்லூரி பற்றியும், நிதிநிலை பற்றியும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதற்கு, நாங்கள் எங்கள் கஷ்டத்தை அரசிடம் சொன்னால், அரசின் கஷ்டங்களை எங்களிடம் சொல்வது நியாயமா..? என்று துரைமுருகன் பேசினார்.


Advertisement

மேலும் கல்லூரி திறப்பது தொடர்பாக நேரடியாக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பதிலை எதிர்பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் பேசினார். இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கேபி.குப்பம் பகுதியில் பெண்கள் கல்லூரி அமைப்பது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close