சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் முதலாவது திருமண நாளில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன், தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவது திருமண நாளில் மனைவிக்கு விதவிதமான பரிசுகளையும், வாழ்த்து அட்டைகளையும், பூங்கொத்துகளையும் பரிசாகத் தரும் கணவனை பார்த்திருக்கிறோம். ஆனால் பட்டாபிராமைச் சேர்ந்த வெங்கடேசன் தனது மனைவி மதுமிதாவுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள் பரிசாக, மரணத்தை அளித்துள்ளார். காதல் திருமணம் ஒரே ஆண்டில் கொலையில் முடிந்துள்ளது.
சென்னை பட்டாபிராமில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி மதுமிதா. பொறியியல் பட்டாதாரிகளான இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர். காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்கள் சம்மத்துடன் தான் நடைப்பெற்றுள்ளது. மதுமிதாவுக்கு நகை, சீர்வரிசை போன்றவற்றை அவர்களது பெற்றோர்கள் வழங்கியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு மதுமிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். வெங்கடேசன் நிரந்தரமான வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
திருமண நாளில் இதேபோன்று இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வெங்கடேசன் வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு காதல் மனைவி என்றும் கூட பாராமல் மதுமிதாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதியில் தாக்கியதால் மதுமிதா அப்படியே சுருண்டு விழுந்துள்ளார். மனைவியை கொலை செய்த வெங்கடேசன் பயத்தின் காரணமாக தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மனைவியை கொன்ற கத்தியால் தனது கழுத்து மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்படுத்தியுள்ளார். வலி தாங்க முடியாமல் வெங்கடேசன் கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்துள்ளார். கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், இதுதொடர்பாக பட்டாபிராம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே மதுமிதா உயிரிழந்தார். வெங்கடேசன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருத்து வேறுபாட்டால் கல்யாண நாளில் காதல் தம்பதிக்கு ஏற்பட்ட நிலை அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!