[X] Close

ரஜினியின் வில்லன் விஜய்சேதுபதிக்கு படத்தின் கதையே தெரியாதாம்

Here-s-why-Vijay-Sethupathi-is-in-Rajinikanth-s-film-

கார்த்திக் சுப்ராஜ் இயக்கப் போகும் அடுத்த ரஜினி படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான ப்ரீ- புரொடக்‌ஷன் வேலைகள் தற்சமயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் வேலைகளை முடித்த கையோடு, அவர் ரஜினி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். 


Advertisement

பொதுவாக விஜய்சேதிபதி தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஹீரோ. படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படித்து பார்த்த பிறகே அந்தக் கதை பிடித்திருக்கும் பட்சத்தில் அதில் நடிக்க ஒப்புக் கொள்வார். அப்படி அவர் ஒப்புக்கொண்ட கதைகளில் நடிக்கவே அவருக்கு நேரமில்லை. அவரது கால்ஷீட் டைரி நிரம்பி வழிவதாக சில ஆண்டுகளாகவே பேச்சு அடிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. விஜய்சேதுபதி தன் சினிமா வாழ்க்கையில் கதையை கேட்காமலே ஒப்புக் கொண்டுள்ள படம், ரஜினியின் இந்தப் படம்தான். அதற்கு அவரது சொந்த விருப்பமே காரணம். ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற இயல்பான ஆசைக்காக அவர் கதையைகூட கேட்கவில்லையாம். மேலும் அவரது ஃபேவரைட்ஸ் டைரக்டர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் படம் என்பதால் கூடுதல் அக்கறைக்காட்டி உள்ளார் சேதுபதி. 


Advertisement

Advertisement
[X] Close