[X] Close

‘தந்தூரி டீ’ இது புனே ட்ரெண்ட்

Pune-based-tea-shop-sells--Tandoori-Tea

தந்தூரி தேநீர் என்ற பெயரில் பிரத்யேக தேநீரை புனேவைச் சேர்ந்த பட்டதாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். 


Advertisement

தந்தூரி சிக்கன், தந்தூரி ரொட்டி சுவைத்திருப்பீர்கள் தந்தூரி தேநீர் சுவை தெரியுமா உங்களுக்கு. இந்த பெயரே இப்ப தான் கேள்விபடுறேன் என்கிறீர்களா சரி விடுங்கள். புனேவைச் சேர்ந்த தேநீர் கடையில் தான் இந்த தந்தூரி தேநீர் விற்பனை செய்யப்படுகிறது. புனேவை அடுத்த கராடி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் பிரமோத் மற்றும் அமோல் ராஜ்டியோ. பொறியியல் பட்டதாரிகளான இவர்கள் தற்போது தந்தூரி தேநீர் கடையை நடத்தி வருகின்றனர். அது என்ன தந்தூரி தேநீர் என்கிறீர்களா?. சரி விஷயத்துக்கு வருவோம். 

தந்தூரி அடுப்பில் வைக்கப்பட்ட சூடான மண்குடுவையில் சூடான தேநீரை ஊற்றி இயற்கையான முறையில் இந்த தேநீர் தயாராகிறது. தேநீருக்கான  பாலையும் பண்டையக்கால முறைப்படி மண் சட்டியிலேயே சூடுபடுத்துகிறார்கள். இவர்களின் வித்தியாசமான அனுகுமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர்களின் தந்தூரி தேநீரை பருக அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தந்தூரி தேநீரால் இவர்களுக்கு கல்லா கட்டுகிறது. இந்த கடை வருகைக்கு பின்னர் அப்பகுதியில் மண் குடுவையின் விற்பனையும் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close