தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு, அதன் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற தமிழக சட்டப்பேரவை வரும் 29ஆம் தேதி கூடுகிறது. இந்த நிலையில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு வரும் 24ஆம் தேதி கூடுகிறது.
எந்தெந்த தேதிகளில் எந்த துறைகளின் மானிய கோரிக்கை குறித்து விவாதிப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. 24ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக சட்டபேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவை முன்னவர், எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி