சென்னை மாநகராட்சி மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய "நம்ம சென்னை" என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
வழக்கமாக நம் சுற்றுப்புறத்தில் இருக்கும் குறைகளை பதிவு செய்ய மாநகராட்சியின் இலவச எண் (1913) டையல் செய்தோ அல்லது புகாரை மனுவாக எழுதி அனுப்பியோதான் தெரிவிக்க வேண்டும். ஆனால் இனி சுற்றுப்புறத்தில் குப்பை இருந்தாலோ, கொசுத்தொல்லை, சாக்கடை நீர் தேங்கினாலோ மக்கள் தங்கள் குறைகளை உடனடியாக பதிவு செய்ய சென்னை மாநகராட்சி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. "நம்ம சென்னை" என பெயரிட்டுள்ள இந்தச் செயலி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போதைய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள இச்செயலியில் நொடி பொழுதில் புகாரை பதிவு செய்யலாம். ஆண்ட்ராய்ட் தளத்தில் மட்டும் இயங்கக் கூடிய இந்தச் செயலிலையை ப்ளே ஸ்டோர் போய் பதிவிறக்கம் செய்து, பெயர், தொலைபேசி எண், ஆதார் எண், வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்களை கொடுத்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதில் புகைப்படத்துடன், எழுதி புகாரை பதிவு செய்யலாம். உதாரணமாக தெரு விளக்கு எரியாமல் இருப்பதில் இருந்து, குப்பை அல்லாமல் அசுத்தமாக இருப்பது வரை 12 பிரிவுகளில் அனைத்து புகார்களையும் பதிவு செய்யலாம். பதிவு செய்த புகார் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது, மேலும் புகாரின் நிலை குறித்து அறியும் வசதியும் இதில் உள்ளது.
Loading More post
நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்
மெட்ரோவில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி... கட்டண விவரங்கள் அறிவிப்பு
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்