Published : 12,May 2018 04:18 AM

முக்திநாத் கோயிலில் பூஜை செய்த பிரதமர் மோடி

Prime-Minister-Narendra-Modi-offers-prayers-at-Nepal-s-Muktinath-Temple-

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள முக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார். 

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றுள்ளார்.  பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து பேசினார். தும்லிங்தர் பகுதியில் 900 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைப்பதற்கு இரு பிரதமர்களும் அடிக்கல் நாட்டினர். இந்த திட்டத்தை இந்திய நிறுவனம் செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ராமர் பிறந்த அயோத்தியிலிருந்து நேபாளத்தில் சீதை பிறந்த ஜனக்புரிக்கு இரு நாட்டு பிரதமர்களும் நேரடி பேருந்து சேவையை தொடக்கி வைத்தனர்

இதனையடுத்து அங்குள்ள முக்திநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடிக்கு கோயில் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளியில் வேத கிரந்தங்கள் பயிலும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து முக்திநாத் சிலை அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற அவர் தீபாராதனை காட்டி வழிபட்டார்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்