[X] Close

விரைவில் ஜூனியர் சானியா மிர்சா 

Sania-Mirza-to-become-a-Mother-in--Soon

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விரைவில் தாயாகவுள்ளதாக அவர் தன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.  

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் ஆஸ்திரேலியா திறந்தவெளி டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாவார். கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதிலும், சானியா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.


Advertisement

இந்நிலையில், தற்போது இந்தத் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளனர். சானியா மிர்சாவுக்கு வருகிற அக்டோபர் மாதம் குழந்தை பிறக்கும் என அவரின் தந்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பேபி மிர்சா-‌மாலிக் என குறிப்பிட்டு தாயாகவுள்ளதை படம் ஒன்றின் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக்கும் இதே படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
 


Advertisement

Advertisement
[X] Close