ராமநாதபுரம் அருகே தனது சொந்த மகளை கொசு ஸ்பிரே அடித்து கொலை செய்ய முயற்சித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுர மாவட்டம் சத்திரகுடி அருகே உள்ள செம்மங்குடியை சேர்ந்தவர் சண்முகம். வயது 41. கூலித்தொழிலாளி. இவரது மக்கள் நிவேதா. வயது 16. வீட்டில்தான் இருந்து வருகிறார். கடந்த 26ம் தேதி தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அதேபகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மீது சண்முகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு நிவேதா வழக்கம்போல் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சண்முகம் தனது மகள் என்றும் பாராமல் அவர் மீது கொசு ஸ்பிரே அடித்து கொல்ல முயற்சித்தார். உடனே முழித்துக்கொண்ட நிவேதா சத்தம்போட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நிவேதாதை மீட்டனர். இதனையடுத்து மகளை கொலை செய்ய முயற்சித்ததாக சண்முகத்தை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் விசாரணையின்போது, ‘உன் மகள்தான் கெட்டுப்போச்சே. இனி என்ன...’ என பலர் தன் காதுபடவே பேசுவதாகவும் இதனால் தான் மனஉளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளளார். எனவேதான் மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலையில் இருந்தபோது அது நடக்காமல் போய்விட்டதாகவும் போலீசார் விசாரணையில் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!