Published : 09,Apr 2018 04:38 AM

சைக்கிள் ரேஸில் பங்குபெற்ற வீரர் திடீர் பலி!

Belgian-cyclist-dies-after-mid-race-heart-attack

சைக்கிள் ரேஸில் பங்குபெற்ற பெல்ஜியத்தை சேர்ந்த வீரர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 

பாரிஸ் - ரூபெய்க்ஸ் சைக்கிள் பந்தயம் புகழ்பெற்ற ஒன்று. பாரிஸ் நகரில் தொடங்கி பெல்ஜியம் எல்லையில் உள்ள ரூபெய்க்ஸில் இந்தப் போட்டி முடியும். வருடா வருடம் நடக்கும் இந்தப் போட்டி இந்த வருடம் நேற்று தொடங்கியது. இதில் வெரண்டா வில்லியம்ஸ் அணி சார்பில், பெல்ஜியத்தைச் சேர்ந்த 23 வயதான மைக்கேலும் கலந்துகொண்டார். 

போட்டித் தொடங்கியதும் சைக்கிளில் வேகமாக சென்றவர், ஒரு இடத்தில் திடீரென மயங்கி சாலையில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு சைக்கிள் பந்தய வீரர்களுக்கும்  அணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்