Published : 29,Mar 2018 11:08 AM

மனைவியின் பணி நிரந்தரத்துக்காக தீக்குளித்த கணவர்!

Husband-Immolation-for-Wife-Job-conformation-in-Madurai

மனைவிக்கு பணி நிரந்தரம் செய்யாததைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

மதுரை தினமணி நகரைச் சேர்ந்த ஜேசுராஜா என்பவரின் மனைவி அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியையாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், பணி மூப்பு அடிப்படையில், தனது மனைவிக்கு பணி நிரந்தரம் செய்யாமல் பள்ளி நிர்வாகம் மற்றவர்களை பணி நிரந்தரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஜேசுராஜா இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார். 108 அவசர ஊர்தி வர தாமதமானதால் ஜேசுராஜாவை, அருகிலிருந்தவர்கள் அமரர் ஊர்தியில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஜேசுராஜாவுக்கு 40 சதவிகிதம் தீக்காயங்கள் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ‌வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்