கொடைக்கானல் அருகே ஆற்றில் நீர் இருந்தும், குழாயில் நீர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பரப்பாற்றில் மக்கள் குடிப்பதற்கு தேவையான குடிநீர் உள்ளது. இருப்பினும் ஊரில் உள்ள குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், எதிலும் குடிநீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் கழிவு நீர் கலந்து வருவதாகவும், பூச்சி புழுக்களோடு சுகாதரமற்று வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டபோது, 15 நாட்களில் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக வட்டாட்சியர் கூறியுள்ளார். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை என மக்கள் குறை கூறுகின்றனர்.
அத்துடன் புதிய குழாய்கள் போடப்பட்டுள்ளதாக கணக்கு எழுதி, பணத்தை ஊழல் செய்துவிட்டார்களோ எனவும் மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். குழாய்களில் தண்ணீர் வராத காரணத்தால், குடிநீருக்காக கிராம மக்கள் பல கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்று எடுத்து வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. விரைவில் தங்களின் பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!