அதிவேக இணைய சேவை வழங்குவதற்கான செயற்கைக்கோள் சோதனை முயற்சியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை மறுதினம் மேற்கொள்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். அந்த வகையில், அதிவேகமாக இணைய சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்கைக்கோள் அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டது.
அதன்படி இரண்டு செயற்கைக்கோள்களை கொண்ட ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாளை மறுதினம்(21ஆம் தேதி) விண்ணில் செலுத்துகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள வாண்டென்பெர்க் தளத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை காலை 6.17 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
முன்னதாக, 'ஃபால்கோன் ஹெவி' என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து இம்மாத தொடக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் ஏவப்பட்டது.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்