[X] Close

திரிபுராவில் 74 சதவிகித வாக்குகள் பதிவு

74-Percent-vote-registered-in-Tripura

திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த முறை பதிவான வாக்குகளை விட 17 சதவிகிதம் குறைவு ஆகும்.


Advertisement

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது.  காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தமாக 74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த முறை பதிவான வாக்குகளை விட 17 சதவிகிதம் குறைவு ஆகும். சாரிலாம் தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் உயிரிழந்ததால் அடுத்த மாதம் 12-ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாக்குகள் அனைத்தும் வரும் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன. திரிபுராவில் 25 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரி கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.


Advertisement

Advertisement
[X] Close