[X] Close

தலைமையாசிரியரை கத்தியால் குத்திய மாணவர்

School-student-stabbing-Head-master-in-Vellore

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பள்ளியின் தலைமை ஆசிரியரை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளியின் தலைமையாசிரியராக பாபு பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஹரிஹரன். இந்த மாணவர் அடிக்கடி பள்ளியில் சேட்டைகள் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலமுறை தலைமையாசிரியர் பாபுவும் மாணவர் ஹரிஹரனை கண்டித்திருக்கிறார்.

இந்நிலையிலும் இன்றும் தலைமையாசிரியர் பாபு, மாணவர் ஹரிஹரனை கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது பையில் மறைத்து வைத்திருந்தக் கத்தியை எடுத்து வேகமாக தலைமையாசிரியர் பாபுவின் வயிற்றில் குத்திவிட்டு மாணவர் ஹரிஹரன் தப்பியோடி விட்டார். பாபுவின் வயிற்றில் கத்தி வேகமாக குத்தப்பட்டுள்ளதால் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தலைமையாசிரியர் பாபு திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close