Published : 03,Feb 2018 11:45 AM

கொல்கத்தாவில் ‘விஜய் 62’படக்குழு 

Vijay-62-Movie-Shooting-in-Kolkata

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘விஜய் 62’ படப்பிடிப்புக்காக படக்குழு கொல்கத்தா சென்றுள்ளது. 

‘விஜய் 62’ படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். அதற்கான போட்டோ ஷூட் ஏவி.எம் ஸ்டுடியோவில் ஏற்கெனவே எடுக்கப்பட்டது. அதன் பின் இப்போது சென்னையில் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்த பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் முதல் கட்ட வேலைகள் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஒரு குழு கொல்கத்தாவை ரீச் ஆகிவிட்டதாம். அங்கு முன்னேற்பாடாக அனைத்து வேலைகளையும் அந்தக் குழு கவனித்து வருகிறதாம். 

முருகதாஸுக்கு கொல்கத்தா மிகவும் செண்டிமெண்ட் ப்ளேசாம். ஆகவே அங்குதான் இரண்டு பாடல்களை படக்குழு படமாக்க உள்ளது. மேலும் அங்கு சில மிக்கியமான காட்சிகளையும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்