Published : 02,Mar 2017 12:30 PM

ஐபோன் ஆப் உருவாக்கிய 81 வயது பாட்டி

81-year-old-Japanese-woman-launches-her-first-app-for-iPhone

வயது முதிர்ந்தவர்களுக்கான பயன்பாட்டிற்கு ஐபோன் செயலியை ஓன்றை வடிவமைத்துள்ளார் ஜப்பான் நாட்டை சார்ந்த 81 வது பாட்டி மசாக்கோ வகாமியா.

ஹினாடன் ( Hinadan) என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஐபோன் ஆப் ஜப்பான் நாட்டின் பாரம்பரிய பொம்மை திருவிழாவான ஹினமட்சுரி என்ற திருவிழாவை அடிப்படையாக கொண்டது. இதில் குறிப்பிட்ட ஆடையணிந்த பொம்மைகளை ஹினமட்சுரி திருவிழாவில் வைக்கப்படும் வரிசையில் நிரப்பினால் வெற்றியடைவீர்கள்.

தன் கண்டுப்பிடிப்பு குறித்து பேசிய மசாக்கோ வகாமியா “இளையோருக்கு எதிராக விளையாடும் போது, என்னை போன்ற வயதானவர்கள் எளிதாக தோற்க நேரிடும். எங்களது விரல்கள் வேகமாக செயல்படாது. அதனால், முதியவர்கள் விளையாடும் மாதிரியான ஒரு ஐபோன் ஆப் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படிப்பட்ட ஆப்-கள் மிக குறைவு” என்று கூறினார்.

ஓய்வு பெற்ற வங்கியாளரான வகாமியா தனது 60வது வயதில் கணினி பயிற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்