[X] Close

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

Foreign-Secretary-S-Jaishankar-meets-US-NSA--discuss-bilateral-ties

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டருடன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக, மெக்மாஸ்டர் பொறுப்பேற்று 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாஷிங்டனில் நடந்த இந்தச் சந்திப்பின் போது இருநாடுகள் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் பால் ரியானையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். கன்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஸ்ரீனிவாஸ் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கலையும் பால்ரியான் தெரிவித்துக் கொண்டார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அளவிலான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் 4 நாள் பயணமாக பிப்ரவரி 28ல் அமெரிக்கா சென்றடைந்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close