ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து அணி, ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டி, சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இதில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது சம்பளத்தில் 40 சதவிகிதமும் அந்த போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் மற்ற வீரர்களுக்கு 10 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டை ஸ்டீவன் ஸ்மித் மறுத்துள்ளார். பந்தை சேதப்படுத்தியது தொடர்பான காணொளி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து ஸ்மித் விளக்கமளித்துள்ளார். பந்தின் மீது எச்சிலை மட்டுமே தாம் தடவியதாகவும், உதட்டுச் சாயம் போன்ற எந்த பொருட்களையும் கொண்டு பந்தை சேதப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!