Published : 28,Feb 2017 02:01 PM

பேரவலத்தில் தமிழகம் சிக்கியுள்ளது... மு.க.ஸ்டாலின்

DMK-working-president-mk-stalin-alleges-admk-government

மக்களின் எண்ணங்களுக்கு மாறாகவும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராகவும் பொம்மை ஆட்சியாளர்களால் வழிநடத்தப்படும் பேரவலத்தில் தமிழகம் சிக்கியிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சியை சட்டபூர்வமாகவும், ஜனநாயக புரட்சியின் மூலமாகவும் அகற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிமுக ஆட்சி எப்போது வேரோடு தூக்கியெறியப்படும் என்கிற ஆவலும், வேகமும் தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இதற்காக திமுக ஒருபோதும் குறுக்கு வழியில் செயல்படாது என்றும் தெரிவித்துள்ளார். நேர்மையான ஜனநாயக வழியில் சட்டபூர்வமான முறையிலேயே திமுக செயல்படும் என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பேராதரவுடன் அவர்கள் விரும்பும் ஆட்சியை நிலைபெறச் செய்வதே தமது பிறந்தநாளில் திமுக தொண்டர்கள் ஏற்கும் சூளுரையாக இருக்கட்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்