Published : 09,Jan 2018 06:55 AM
பஸ் ஸ்டிரைக்: பேருந்து நிலையத்தில் வாத்து மேய்த்த முதியவர்!

வேலூர் பேருந்து நிலையத்தில், பேருந்து இயக்கப்படாததால் ஒருவர் வாத்து மேய்த்தார்.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 6வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அரசுப்பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
இதில் ஒரு பகுதியாக வேலூர் மண்டல போக்குவரத்து அலுவலகம் எதிரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகளுடன் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
சிலர் கைக்குழந்தையுடன் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே ஒரு சில பேருந்துகளே இயக்கப்படுவதால், பேருந்து நிலையத்திற்குள் ஒருவர் வாத்து மேய்த்தார்.