Published : 29,Dec 2017 11:20 AM

ஏடிஎம் மையங்களில் ரூ.18 லட்சம் கொள்ளை‌: ஊழியர் கைவரிசை

Bank-employee-rob-18-lakhs-from-atm

சென்னையில் இருவேறு இடங்களிலுள்ள ஏடிஎம் மையங்களில், பணம் நிரப்பும் பணியில் ஈடுப்பட்ட நபரே 18‌ லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.

சென்னை மணலியைச் சேர்ந்த குமார் என்பவர்‌ தனியார் வங்கியில், ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவர், கடந்த‌ 18-ஆம்‌ தேதி ராஜமங்க‌லம் ஜி.கே.எம். காலனியிலுள்ள ஏடிஎம்-ல் பணம் நிரப்பியுள்ளார். அதற்கு அடுத்த நாளே ஏடிஎம் மையத்திற்கு சென்று ரகசிய கடவு எண்ணை பயன்படுத்தி 9,65,000 ரூபாய் பணத்தை குமார் திருடியுள்ளார். 

இதேபோல், 16-ஆம் தேதி அயனாவரத்தை அடுத்துள்ள தலைமைச்செயலக காலனி ஏடிஎமில் 8,57,000 ரூபாய் பணத்தை குமார் திருடியது தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள குமாரை கைது செய்யவும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை‌ மீட்கவும் சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை‌ நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்