[X] Close

ஹாக்கி கேப்டன் காதலி ஆனார் டாப்ஸி!

Taapsee-Pannu-wraps-up-the-India-schedule-of-sports-biopic--Soorma-

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாறு சினிமாவாகி வருகிறது. இதில் அவர் காதலியாக நடிக்கிறார் டாப்ஸி.

தமிழில், ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட சில படங்களில் நடித்த டாப்ஸி, இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து மேலும் 3 இந்தி படங்களில் நடித்துவருகிறார். அதில் ஒன்று ’சூர்மா’. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதை ஷாத் அலி இயக்குகிறார். இதில் சந்தீப் சிங்கின் காதலியாக டாப்ஸி நடிக்கிறார்.

’இந்தப் படத்தின் இந்திய ஷெட்யூலின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து வெளிநாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதம் படம் ரிலீஸ் ஆகும்’ என்று தெரிவித்துள்ளார் டாப்ஸி.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close