திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே போர்வெல் லாரி மீது வேன் மோதியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருப்பதிக்கு 15 பேர் கொண்ட குழுவினர் டெம்போ டிராவலர் வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர். வேன் துவரங்குறிச்சி அருகே சென்றுகொண்டிருந்த போது, அந்தப்பகுதியில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது வேன் வேகமாக மோதியது. அந்தக் கோர விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர்களில் 2 பேர் குழந்தைகள். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் திருச்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதோடு, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே விபத்தில் வேன் உருகுலைந்து போனதால், அதில் சிக்கிக்கொண்டவர்களின் உடலை மீட்க தீயணைப்புத்துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடினர்.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை