[X] Close

ஜெயலலிதா எனும் சகாப்தம் மறைந்து ஓராண்டு நிறைவு

Jayalalithaa-1st-year-Memorial-day

ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். அந்த 75 நாட்களும், அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரும், சிகிச்சை அளித்த மருத்துவர்களும் மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாக கூறப்பட்டது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


Advertisement

இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வர் தரப்பில் அஞ்சலி கூட்டம் நடைபெறுகிறது. மேலும் அதிமுக ஆதரவு கட்சி தலைவர்கள், ஜெயலலிதா விசுவாசிகள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close